செய்திகள்

தபால் சேவை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவா் பலி (படங்கள்)

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் சேவை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவா் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 10.04.2015 அன்று அதிகாலை 1 மணியளவில் வட்டவளை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வட்டவளை புகையிரத நிலையத்தில் உள்ள ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது.

உயிரிழந்தவா் புகையிரத நிலையத்தில் சமிஞ்ஞை காட்டும் நபா் என விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனா்.

இவ்வாறு உயிரிழந்தவா் 49 வயதுடைய நிமல் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

DSC08246

DSC08248

DSC08250

DSC08252

DSC08255

DSC08256