செய்திகள்

தபால் திணைக்கள ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்கள் நேற்று நண்பகல் தொடக்கம் அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு பிரதான தபாலக ஊழியர்கள் இன்று நண்பகல் 12.00மணியவில் தபாலகத்துக்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அஞ்சலி தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

தபால் திணைக்களத்தில் அண்மைக்காலமாக காணப்படும் சம்பள முரண்பாடு,நிர்வாக ரீதியான முரண்பாடுகளை நீக்ககோரியே இந்த அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் அரச சுற்றறிக்கை உருவாக்கிய முரண்பாடுகளை உடனடியாக நீக்கு, சம்பள முரண்பாட்டை நீக்கு, தரம் 1தரம் 2 சம்பள முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும் போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

தபாலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பி அதன் சேவையினை சிறந்த முறையில் கொண்டுசெல்ல புதிய அரசாங்கம் வழியேற்படுத்தவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமது நியாயமான கோரிக்கைகளை புதிய அரசாங்கம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் தபாலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தபாலகத்தின் சேவைகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்பாடாத வகையில் முன்னெடுக்கப்பட்டது.