செய்திகள்

தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால பணிப்பு

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஹதுருசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார். இதற்காக இரண்டு வாரங்கள் ஒதுக்கப்படும்.

ஏப்ரல் 2ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை, இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.