செய்திகள்

தமது கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்வத்துடன் செவிமடுக்கவில்லை; கைதிகள் இருவர் கவலை

வடக்கிற்கு விஜயம் செய்திருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் இருவர்     நேற்று  சந்தித்து சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தனர்.

ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராஜா ஜெனீவன் மற்றும் கோமகன் ஆகியோரே எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்திருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் மருத்துவ ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் குறித்த இருவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இருந்தபோதிலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் தமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுக்காமை கவலையளிப்பதாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கோமகன் கூறினார்.

n10