செய்திகள்

தமிழகத்திலிருந்து கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு படகுகள் பயணத்திற்கு அனுமதி

கச்சதீவு திருவிழாவிற்கு பக்தர்கள் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா பெப்ரவரி மாதம் 28ந் திகதி தொடங்கி மார்ச் 1ம் திகதி 2 தினங்கள் நடைபெறவுள்ளது.

எனவே இத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து கச்சதீவு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் ராமேஸ்வரம் பங்குத்தந்தை சகாயராஜ் இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளும் இலங்கை இந்திய இரு நாட்டுப் பக்தர்களும் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர் நேசநாயகம் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.