செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தெரிவித்தார். தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதால், வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தை விட 3 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று மதியம் பதிவானதாகவும் குறிப்பிட்டார்.

N5