செய்திகள்

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 20 பேர் இன்று இலங்கை திரும்பினர்: மீளக்குடியமர்த்த ஏற்பாடு

யுத்தகாலத்தின் போது இலங்கையிலிருந்து வெளியேறி, தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் 20 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று செவ்வாய்கிழமை காலை இலங்கையை வந்தடைந்ததாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சென்னையிலுள்ள அகதி முகாமிலிருந்தே இவர்கள் 20 பேரும் வருகை தந்துள்ளனர். 10 ஆண்களும் 10 பெண்களுமே நாடு திரும்பியுள்ளனர்.

தாயகம் திரும்பியுள்ளவர்களை திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்துவதற்கான ஏற்படுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராயலத்தினூடாக இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
R-06