செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு 70 இடங்களே கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஒரு அணியாகவும், தி.மு.க., காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகிறது.தி.மு.க., அதிகம் எதிர்பார்த்த தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்துள்ளது. பா.ஜ.,வும் உதிரி கட்சிகளுடனும், பா.ம.க., தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. பா.ம.க.,வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பல கட்ட தேர்தல் பிரசாரங்களை முடித்துள்ளனர். இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், டைம்ஸ் நவ் டிவி ‘சி வோட்டர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது.

இதில்,தமிழகத்தில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி, 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. தி.மு.க., கூட்டணி 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் 34 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் எனவும் தெரியவந்துள்ளது. தே.மு.தி.க., தி.மு.க.,வுடன் சேராதது, அ.தி.மு.க.,வுக்கு பலனை கொடுக்கும் எனவும், தே.மு.தி.க., 14 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்:
மொத்த தொகுதிகள் – 294
மெஜாரிட்டிக்கு தேவை – 147
திரிணமுல் காங்., – 160
மார்க்சிஸ்ட் – 106
காங்., – 21
பா.ஜ., – 4
மற்றவை – 3

அசாம்:
மொத்த தொகுதிகள் 126
மெஜாரிட்டுக்கு தேவை – 63
காங்., – 53
பா.ஜ., – 55
ஏ.ஐ.யு.டி.எப்., – 12
மற்றவை – 6

கேரளா
மொத்த தொகுதிகள் – 140
மார்க்சிஸ்ட் – 86
காங்., – 53
பா.ஜ., – – 1

புதுச்சேரி
மொத்த தொகுதிகள் – 30
காங்., – தி.மு.க.., கூட்டணி 17 தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

N5