செய்திகள்

தமிழகத்தில் 400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் உத்தம வில்லன்

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘உத்தம வில்லன்’.

இப்படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர். உத்தமன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரம், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரம் என கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

படத்துக்கு கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவருடைய நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. உத்தம வில்லன் திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த படங்களில் அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் திரைப்படம் உத்தம் வில்லன் தானாம்.