செய்திகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு இடமில்லை – குஷ்பூ பேட்டி

கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குஷ்புவுக்கு புதுமுகச் செய்தித் தொடர்பாளர் எனும் பதவி வழங்கப்பட்டது. தற்போது மூத்த செய்தி தொடர்பாளராக அவர் உயர்த்தப்பட்டுள்ளார். தனக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னர் அவர் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு விடையளித்தார்.

தமிழக காங்கிரசில் இளங்கோவன் அணி, ப.சிதம்பரம் அணி என 2 அணிகள் செயல்படுகிறதே?
உங்கள் கண் பார்வைக்கு அப்படி தெரிகிறது. தமிழக காங்கிரஸ் தலைவருக்கு தெரியாமல் சிதம்பரம் கூட்டம் நடத்தவில்லை. எங்களை பொறுத்தவரை ஒரே அணி தான். காங்கிரஸை தவிர்த்து யாருமே இருக்க முடியாது. இந்த நாடு அடைந்திருக்கும் ஜனநாயகமே காங்கிரஸ் அளித்தது தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இருந்த திமுக-வில் ஜனநாயகம் இல்லையா?
நான் ஒரு கட்சியிலிருந்து விலகி இங்கு வந்தேன் என்பதனால்இ அந்த கட்சி குறித்து தவறாக கருத்து கூற வேண்டும் என்று அவசியமில்லை.

குறுகிய காலத்தில் எதன் அடிப்படையில் இந்த பதவி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?
காங்கிரசை முன்னிலைக்கு கொண்டு செல்ல என்னால் முடியும் என்று சோனியாவும் மற்ற தலைவர்களும் கருதியதன் அடிப்படையில் இந்த பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.பேசக்கூடிய திறமையும் இருப்பதால் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

காமராஜரை பற்றி கார்த்தி சிதம்பரம் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?
காங்கிரசையும்இ காமராஜரையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. காங்கிரஸ் பற்றி பேச வேண்டுமானால் காமராஜரைப் பற்றி பேச வேண்டும். இரண்டுமே ஒன்றுதான்.

மக்கள் பிரச்னைகளை எடுத்து சொல்வதில் காங்கிரஸ் பின் தங்கியுள்ளதே?
காங்கிரஸ் ஆட்சி மக்கள் பிரச்னைகளுக்காக 130 ஆண்டுகளுக்கு முன்பே போராடி வருகிறது. மக்கள் பிரச்னைக்காக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காங்கிரஸ் பல போராட்டங்களை சந்தித்துள்ளது. தொடர்ந்து வீதிக்கு வந்து போராட தயாராக இருக்கிறேன்.

காங்கிரசை வலுப்படுத்த உங்களால் முடியுமா?
இப்போதுதான் எனக்கு இந்த பதவி கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் தலைவர்தான் பதில் அளிக்க வேண்டும்.

நீங்கள் தி.மு.க.வில் பதவி தரவில்லை என்பதால் காங்கிரசுக்கு வந்தீர்களா?
அது தவறு. எனக்கு எப்போதும் தி.மு.க. தலைவர் கலைஞர் மீது அன்புஇ பாசம் உண்டு. அது என்றும் மாறாது.

தமிழக பட்ஜெட் எத்தகையது?
தமிழக பட்ஜெட் குறித்த விவரத்தை நான் முழுமையாக அறியவில்லை. அதனால் இப்போது அது குறித்து எதுவும் கூறப்போவதில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரையில், ஆட்சி நிர்வாகம் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி எங்கே போனார்?
துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நிலைப்பாடு குறித்து அவரே பேசுவார். இது தொடர்பாக அவரே பதிலளிப்பது தான் சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கு ஓய்வு தேவை. அந்த வகையில் அவர் ஓய்வெடுத்து சென்றார். இதனை அரசியலாக்குவது மிகவும் தவறு. விரைவில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து சந்தேகங்களை தீர்த்து வைப்பார்.

தமிழகத்தில் பாஜக-வின் நிலை என்ன?
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு இடமில்லை. மக்களுக்கு தாமரைச் சின்னம் யாருடையது என்றே தெரியாது. அது தான் அவர்களது நிலை.

மேலும் அவர்,
“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ துணைத் தலைவர் ராகுல் காந்திஇ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். அத்தோடு  தனது திறமையை மதிப்பிட்டு தலைவர் சோனியா காந்தி வழங்கி இருக்கும் இந்த பொறுப்புக்கு இணங்க திறனுடன் செயல்பட அனைத்து முயற்சிகளையும் தான் எடுப்பேன்” என்றார் குஷ்பு.