செய்திகள்

8 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், 18-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில்  இந்திய ஆட்சிப் பணி விதியின்படி, தமிழக அரசுப் பணியில் உள்ள 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்க ஜனாதிபதி ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்நிமித்தம்

எஸ்.செந்தாமரை -டி.ஆர்.ஓ.இ தேர்தல், சென்னை மாநகராட்சி
ஆர்.கண்ணன்  -டி.ஆர்.ஓ. சென்னை மாநகராட்சி
எஸ்.நடராஜன்  -கூடுதல் இயக்குனர் மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவை,சென்னை
ஏ.சிவஞானம் -இணை தலைமைத் தேர்தல் அதிகாரி
எல்.நிர்மல்ராஜ் -பொதுமேலாளார், டெக்ஸ்கோ
எஸ்.ஏ.ராமன் -துணைச் செயலாளர், முதல்-அமைச்சர் அலுவலகம்
ஏ.அண்ணாதுரை -மண்டல அதிகாரி, சென்னை மாநகராட்சி
இ டி.எஸ்.ராஜசேகர்

ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.