செய்திகள்
தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வலுக்கும்
சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் இருந்து கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிறீதரன் முன்வைத்த கருத்தின் பின்னணியிலேயே இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்த தீர்மானம் சுமந்திரன் அணியின் தீர்மானம் என அரசியல் நிலைப்பாடுகளை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வந்த வேளையில், மாவையும் கட்சியின் தீர்மானத்தை முன்னின்று ஒற்றுமையாக செயற்படுத்துவோம் என அறிவித்துள்ளார்.
-(3)