செய்திகள்

தமிழர்களிடம் புலிகளின் பெயரில் நகைகளை அபகரித்தோரை அம்பலப்படுத்துவோம்

வடக்கு தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் மிகச் சிறிய அளவே அந்த மக்களுக்குத் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும், புலிகள் மீது அதற்கான பழி சுமத்தப்பட்டாலும் அது உண்மையல்ல எனவும் தெரிவித்த உணவு கூட்டுறவுத்துறை அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, அது குறித்த விசாரணைகள் துரிதப்பட்டு வருவதாகவும் உண்மை விரைவில் வெளிவருமெனவும் சுட்டிக்காட்டினார்.

கொள்ளையிடப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் மீட்டெடுத்து உரியவர்களுக்கு கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.