செய்திகள்

தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையின் மூன்றாம் படிநிலையாக தமிழ் பொருளியல் படுகொலை (Economic Genocide)  தீவிரமடைதல்.

சிவா செல்லையா

பாரிய இனப்படுகொலையினை எதிர்கொண்ட ஈழத்தமிழர் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிலையில் கலாசாரப் படுகொலையினை (Cultural Genocide) எதிர்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழர் தாயகத்தில் பொருளியல் படுகொலை (Economic Genocide) நிகழ்கின்றது. யுத்தத்தால் அழிந்த தமிழ்ச்சமூக மூலதனம் தற்போதைய பொருளியல் படுகொலைகளால் மேலும் சிதைவுறும் நிலையில் அமைகின்றது. தமிழர் தாயகத்தில் பொருளதாரத்தடை, பொருளாhதரத் தேக்கநிலை, பொருளாதாரத் தாழ்வுநிலை என்பன அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருளியல் படுகொலைக்கு உட்படும் சிறுபான்மையினம் அதன் தாயகத்தில் தொடர்ந்து வாழ்வதற்கான சூழலை இழக்கும். அச் சமூகக் கட்டமைப்புக் குலைந்து அசாதாரணச் சமூகச் சூழல்களான சட்டவிரோதச் செயற்பாடுகள், போதை வர்த்தகம், ஆட்கடத்தல், புலம்பெயர்வு என்பன அதிகரிக்கும்.

இனப்படுகொலைகள் பற்றிய 21ம் நூற்றாண்டின் நாடுகள் சார்ந்த நவீன ஆய்வில் ஒருங்கிய சமர்முனைகளில் கலாசாரப் படுகொலை, பொருளாதாரப் படுகொலை என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதனை ருவாண்டா, சூடான் உட்பட ஆபிரிக்க நாடுகளிலும், பொஸ்னியா, சேர்பியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் காணலாம்.

அந்த வகையில் ஈழத்தமிழர்களும், அவர்களது தாயகத்தில் கடுமையான பொருளாதாரப் படுகொலைக்கு உட்பட்டுள்ளனர். அதன் தாக்கத்தை உணர்வதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் செல்லலாம். உதாரணமாக சிங்கள அரசு எழுந்தமானமாக நாணயத்தாள்களை அச்சிட்டு தமிழர்களின் சகல முதலீடுகளையும் பெறுமதியற்றதாக ஒரு கணத்திலேயே செய்து உள்ளது. இது ஒரு பாரிய பொருளாதாரப் படுகொலையாகும். முன்னர் ஆயுதங்களால் அழிக்கப்பட்ட தமிழினம் இன்று பொருளாதாரத் தாக்குதலால் அழிக்கப்படுகின்றது. இதற்கு அரசசார்பு வங்கிகள், பொருளாதாரப் படுகொலை வதைமுகாம்களாக மாறியுள்ளன. இதன் ஓர் சிறிய எடுத்துக்காட்டே நுண்கடன் தொல்லையால் நிகழும் தற்கொலைகள் ஆகும்.

அண்மைய உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்திய பொருளாதாரப் படுகொலைகள் சோவியத் ஒன்றியத்தின் பிரிவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவும் உடைவும், சீனாவின் எழுச்சியும், கொங்கோங் மீதான கட்டுப்பாடும், கொரோனாத் தொற்றின் உலகமுடக்கம், ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு என்பன அமைகின்றன. இவை யாவும் ஏனைய நாடுகளைப் போலவே. இந்திய அரசின் சர்வதேச உள்நாட்டு நலன்களை நேரடியாகவே பாதிக்கின்றன. எனவே ஈழத்தமிழர்கள் தமக்கு நிகழும் பாதகங்களுக்கு இந்தியாவின் ஊடாகச் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இந்திய அரசும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அப்பாலேயே தற்போது உலக ஒழுங்கில் தன்னை நிலைநிறுத்தப் பாடுபடுகின்றது. திருகோணமலை எண்ணெய்க்குத ஒப்பந்தம், கொழும்புத்துறைமுக முனைய ஒப்பந்தம் என பொருளாதாரப் படுகொலை இலக்குகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களத்திற்கான முதலீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறே மன்னார்ப் படுக்கையில் உள்ள பெற்றோலிய வளங்களும், புல்மோட்டையில் உள்ள இல்மனைட் வளங்களும் மாற்றப்படும். அடுத்து தமிழர்களின் கடல் வளங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சீன நிறுவனங்கள் கடல் அட்டை உட்பட கடல்சார் தொழில்துறையில் கால்பதித்து உள்ளமை, இலங்கையில் சீனாவின் பொருளாதார முற்றுகை, தமிழின பொருளியல் படுகொலைக்கு மிகவும் பலமான சிங்கள ஆயுதமாகும்.

இலங்கையில் வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை அழிப்பதற்கே பிரஜா உரிமைச்சட்டம் முதலில் பிரயோகிக்கப்பட்டது. இதனால் இலங்கையில் பெரும் செல்வந்தராக இருந்த பல தமிழ் வர்த்தகரது சொத்துக்கள் பறிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இதனால் பாரிய தமிழ் மூலதனம் சிங்களத்திடம் சென்றது. இது ஓர் பொருளாதாரப் படுகொலைக்குச் சிறந்த உதாரணமாகும். இது நடைபெற்றது இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு மேல்.

அவ்வாறே இன்றும் பொருளாதாரரீதியில் ஈழத்தமிழர்கள் பாரிய படுகொலைக்கு உட்பட்டுள்ளனர். பெரும்பாலான தமிழர்களின் வருமானம் புலம்பெயர் தமிழர்கள் சார்பாக உள்ளது. இதனால் இங்குவரும் பணத்திற்கு நேரடி மறைமுக வரிகள் பல இன்று விதிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தவர்களுக்கான உள்நாட்டு நுழைவுக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தாயக முதலீடுகள் பெறுமதியற்றதாக்கப்பட்டு உள்ளது. இவை தமிழ்ச் சமூக மூலதனம் (Tamil Social Capital) இலங்கைக்கு வெளியே பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற தொனியினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர் தாயக பொருளியல் படுகொலைக்கு அடுத்த எடுத்துக்காட்டாக அமைவதே விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள். தமிழ்மக்களின் பிரதான வாழ்வியலாக விவசாயமும், மீன்பிடித்தலும் அமைகின்றது. இங்கு விவசாயத்தில் மேற்கொள்ளப்பட்ட உரத்தடையானது அவர்களது வேளாண்மையை 80மூ குறைத்துள்ளது. மேலும் எரிபொருள் நெருக்கடியினால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படவுள்ள சமூகத்தாக்கம் பாரியது. இதுவும் ஓர் பொருளாதாரப் படுகொலையே ஆகும்.

அடுத்து தமிழ் வர்த்தகர்களை நேரடியாகப் பாதிக்கும் வகையிலேயே இறக்குமதிக் கட்டுப்பாடுகளும், இறக்குமதி வரிகளும் அமைந்து உள்ளன. இவை சிங்கள வர்த்தகர்களைப் பாதித்தாலும், சிங்கள மக்களைப் பாதிக்காது. ஏனெனில் சிங்கள மக்களுக்கு உரிய சலுகைகளை அரசு உடனே செய்து தனது இனவாத விம்பத்தை மீளவும் உருவாக்கும். ஆனால் பாதிக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் சிறுபான்மைத் தமிழ் மக்களே ஆவர்.

எனவே புலம்பெயர் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழர் தாயகத்தில் நிகழம் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரப் படுகொலைகளுக்கு எதிராக ஆணித்தரமான செயற்பாடுகளை மேற்கொள்ளல் சாலவே நல்லது.

வாழ்க தமிழ் வையகம் வாழியவே

தழீம் தழீம் தமிழ் தமிழ் தனதன
தழீம் தழீம் தமிழ் தமிழ் தனதன
தழீம் தழீம் தமிழ் தமிழ் தந்தனா
தழீம் தழீம் தமிழ் தமிழ் தந்தனா
தழீம் தழீம் தன தன தந்தனா
தழீம் தழீம் தன தன தந்தனா

எழுகவே எம்மினமே என்றுமே போற்றி போற்றி
எழுகவே எம்மினமே என்றுமே போற்றி போற்றி
தமிழ் தமிழ் தந்தன தமிழீழம் என்றுமே போற்றி
தமிழ் தமிழ் தந்தன தமிழீழம் என்றுமே போற்றி

உயிர்த்தெழு உயிர்த்தெழு தமிழே தாயே
உயிர்த்தெழு உயிர்த்தெழு தமிழே தாயே
தளிர்த்திடு தளிர்த்திடு தரணியெங்குமே தாயே
தளிர்த்திடு தளிர்த்திடு தரணியெங்குமே தாயே
காத்திடு காத்திடு தாயகம் தன்னையே தாயே
காத்திடு காத்திடு தாயகம் தன்னையே தாயே

வாழ்க வாழ்க வாழ்கவே வையகம் வாழியவே
வாழ்க வாழ்க வாழ்கவே வையகம் வாழியவே
வாழிய தமிழ் வையகம் வாழியவே
வாழிய தமிழ் வையகம் வாழியவே
வாழிய வாழிய வாழிய வாழியவே
வாழிய வாழிய வாழிய வாழியவே
யாழ். ஆனந்தன்

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி பார் இங்கு
தீ நுண்மி தந்த கேள்வி இன்று
நெகிழி கொண்டே பல வேலிகள் இங்கு
தீ நுண்மி தொற்றைத் தடுத்திடவே இன்று.

காற்றுக்கென்ன வேலி பார் இங்கு
முகக்கவசம் போட்ட வேலி இன்று
முகம் இழந்தோம் முகவரி இழந்தோம் – இங்கு
காற்றுக்கென்ன வேலி பார் இங்கு
தீ நுண்மி தந்த கேள்வி இன்று
வரிசையில் நிற்பதற்கு வேலி இன்று

காற்றுக்கும் வேலியிட்டோம் இங்கு
காலன் வராது இருக்க இன்று
நேற்று இதை நினைத்திடவில்லை – இங்கு
தோற்றுவிட்டோம் இயற்கையிடம் நாம் இன்று.