செய்திகள்

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதிக்க முடியாது: உதய கம்பன்பில் உறுதி

எமது நாட்டின் அரச தேசிய நிகழ்­வு­களில் ஒரு போதும் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்று மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறு­மையின் தலை­வ­ரு­மான உதய கம்­பன்­பில எனவும் தெரி­வித்தார்.

தேசிய கீதத்தை தமிழ்­மொ­ழியில் பாடு­வது தொடர்பில் சட்­ட­பூர்வ உரிமை நாடு முழு­வ­திலும் அமு­லாக்கும் விதத்தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­னது புதிய அரசின் 100 நாள் வேலை திட்­டத்தின் உள்­ள­டக்­கப்­ப­டா­தொன்று என்றும் தெரிவித்தார்.

தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்­பி­னரின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு மேல் மாகாண சபை அழ­கியற் கலை­ய­ரங்கில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன் போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே உதய கம்­பன்­பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வது தொடர்பின் சட்டபூர்வ உரிமை நாடு முழு­வதும் அமு­லாக்­கப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால குறிப்­பிட்­டி­ருப்­ப­தற்கு நாம் ஒரு போதும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. ஆனால் மறு­புறம் எமது நாட்டின் தேசிய ரீதி­யான அரச நிகழ்­வு­களில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடு­வ­தற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்க போவது இல்லை. அவ்­வாறு நடந்­திடும் பட்­சத்தில் நாம் நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்டு வரு­வ­தற்கும் தயங்­கிட மாட்டோம். புதிய அரசின் 100 நாள் வேலை திட்­டத்தின் இவ்­வா­றான விட­யங்கள் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

உலக நாடு­களை எடுத்து கொண்டால் பல்­வேறு மொழி­களை பிர­தி­நி­து­வப்­ப­டுத்தும் சில நாடுகள் ஒரு மொழ­யினை பிர­தி­நி­து­வப்­ப­டுத்­தியே தேசிய கீதத்தை பாடுகின்றனர் எமது நாட்டில் இவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கும் எமது சட்டத்தில் இடமும் இல்லை என தொிவித்தார்.