செய்திகள்

தமிழ்க் கூட்டமைப்பு பதிவு விவகாரம் 27, 28ஆம் திகதிகளில் மீண்டும் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் கூடிப்பேசவுள்ளனர்.

கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்ட நிலையில் அக்குழு நேற்றும் வியாழக்கிழமையும் சந்தித்துப் பேசின.

இதன்போது ஏற்கனவே தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரைபில் திருத்தம் மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது.

இந்த வரைபில் செய்யப்பட வேண்டிய திருத்தம் தொடர்பில் கட்சிகள் தங்களுக்குள் பேசி முடிவினை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.