செய்திகள்

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் குறும்பட வெளியீட்டு விழா

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் குறும்பட வெளியீட்டு விழா

 

unnamed

லண்டனை தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தினால் இன்று(18.01.2015) மாலை 6.00 மணிக்கு குறும்பட வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது. முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட “இலவு” என்ற குறும்படமே இன்றைய தினம் 180 High street,Hounslow,TW3 1HL என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் வெளியிடப்படுகின்றது.

திரு.வரோதயனால் இயக்கம் செய்யப்பட்டு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படத்தின் இன்றைய வெளியீட்டு நிகழ்வில் திரைப்படத் துறை சார்ந்த பல பிரமுகர்கள் கலந்துகொள்வதுடன் குறும்படம் பற்றிய அவர்களது திறனாய்வு உரைகளும் இடம்பெறவிருக்கின்றன.

திரைப்படத் துறையின் ஆய்வாளரும் கலை இலக்கிய முற்போக்கு எழுத்தாளருமான திரு.யமுனா ராஜேந்திரன், “மண்” மற்றும் “யாவும் வசப்படலாம்”; போன்ற திரைப்படங்களின் இயக்குனர் திரு.புதியவன், “காதலே என்னை காதலி” திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.துரை ஆகியோர் இந்த நிகழ்வில் குறும்படம் பற்றிய தமது விமர்சன உரைகளை நிகழ்த்த உள்ளனர். அத்தோடு நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திரைப்படத் துறையின் முன்னோடிளுள் ஒருவரான மதிப்பிற்குரிய திரு.றகுநாதன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.