தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்: சோபித தேரர் கோரிக்கை
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்த விசேட நீதிமன்றமொன்றை கட்டமைக்கும் ஒழுங்கு முறை அரசாங்கத்திடம் உள்ளதா என சர்வமத தலைவர்கள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, இதன்போது குற்றமற்றவர்களை உடன் விடுதலை செய்யவேண்டும்.
மேலும் யுத்ததினால் இடம்பெயர்ந்தோரின் காணிகள் தொடர்பிலான சட்டத்தில் சிக்கல்கள் இருப்பின் திருத்தங்களை மேற்கொண்டாவது உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சர்வமத தலைவர்கள் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு வடக்கில் மீள்குடியெற்றம் செய்யப்பட்டாலும் எந்தவொரு வசதிகளும் இன்றி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் வானத்தை அன்னாந்து வேடிக்கை பார்க்கும் நிலைமையே வடக்கில் காணப்படுகிறது. எனவும் அப்பேரவை சுட்டிகாட்டியுள்ளது.
சர்வமத தலைவர்கள் பேரவையுடான விஷேட சந்திப்பு நேற்று நீதி அமைச்சில் இடம் பெற்றது.
வடக்கு மக்களின் பிரச்சிணை தொடர்பில் நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே சர்வமத தலைவர்கள் பேரவையின் உறுப்பினர் மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் கரிதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் நிதி அமைச்சர் விஜய தாஸ ராஜபக்ஷவிடம் கேள்வியொழுப்பினர்.
மதுலுவாவே சோபித தேரர் கருத்து வெ ளியிடுகையில் தெரிவித்ததாவது:
“யுத்ததின் பின்னரான காலப்பகுதிகளில் பல்வேறு தரப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுளளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்காமல் பல வருடங்களாக குறித்த அரசியல் கைதிகளை தடுத்து வைத்துள்ளனர்.
இது குறித்தான பிரச்சிணை சர்வதேச அளவில் பெரும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை சிக்கிகொண்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பல்வேறு தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் குறித்த தரவுகள் எந்த அளவு உண்மை தன்மை கொண்டவை என்பதனை எம்மால் உறுதியாக கூறமுடியாது. ஆகையால் இது குறித்தான உண்மை தகவல்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் . எனவே சர்வமத தலைவர்கள் என்ற வகையில் நாம் தற்போது இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.
இந்நிலையில் யுத்ததின் பின்னரான காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பல வருடங்களாக வேதனை அனுபவித்து வருகின்றனர். அரசியல் கைதிகள் மாத்திரமின்றி ஏனைய குற்றச்செயலுக்காக கைது செய்யப்பட்டோரினதும் நிலைமை இவ்வாறே காணப்படுகிறது. கைது செய்யப்பட்டோரின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளாது பல வருடங்களாக சிறையிலேயே தனது வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இதன்காரணமாக அவர்களது வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறுகிறது. எனவே இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.
இதற்கமைய யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மீதான விசாரணையை துரிதப்படுத்தி , அதனுடாக குற்றவாளிகள் அல்லாத அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் . இதனை துரிதமாக செய்யவேண்டும்.
இதேவேளை 30 வருடக்கால இடம்பெற்ற யுத்ததின் காரணமாக தனது சொந்ந இடங்களை இழந்து பலர் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதுமாத்திரமின்றி பலர் இந்திய அகதி முகாம்களிலேும் வாழ்ந்து வருகின்றனர். தற்போது 10 வருடங்களுக்கு மேல் தனது சொந்த இடங்களில் இழந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆகையால் வடக்கில் இடம்பெயர்ந்த அனைவரையும் அரசாங்கம் மீள்குடியேற்ற வேண்டும். இதன்போது தமிழர்கள் மாத்திரமின்றி சிங்களவர்கள் ,முஸ்லிம்களையும் மீள்குடியேற்ற வேண்டும். இந்த விடயத்தில் சட்டசிக்கல்கள் ஏதும் இருப்பின் குறித்த சட்டங்களை திருத்தியாவது மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். எனவே மீள்குடியேற்றம் தொடர்பில் காலத்தாமதம் கொள்ளாமல் மீள்குடியேற்ற வேண்டும்.
வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்டோரை மீள்குடியேற்றம் செய்த போதிலும் எந்தவொரு தொழில் வசதியும் இல்லாமல் அவர்களால் நிம்மதியாக வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது. இந்நிலையில் அவர்கள் தனது வாழ்வாதாரத்திற்காக வானத்தை அன்னாந்து வேடிக்கை பார்க்கும் நிலைமை ஏற்படும். ஆகையால் வடக்கு மக்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்பிரதேச மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்படாவிடின் வடக்கு மக்களின் பிரச்சினையை ஒரு போதும் தீர்க்க முடியாது.
முன்னைய ஆட்சியின் போது எம்மீது சர்வதேசத்தினால் விதிக்கப்பட்ட தடைகள் தற்போதைய புதிய ஆட்சியில் நீக்கப்படும் என நம்புகிறோம். இதன்படி எமக்கு ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை ,ஐரோப்பிய மீன் இறக்குமதி தடைகள் நீக்கப்படும்.இதனுடாக வடக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும். எமது நாட்டு மக்கள் யாழ்ப்பாணத்தில் பயிரப்படும் கிழங்கிற்கு அதிகளவு விருப்பம் .எனவே வடக்கு பொருளாதாரம் நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. என்றார்.