செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய துரித நடவடிக்கை என்கிறார் நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதற்கு விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில் :-

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்தியுள்ளார் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் பணி;ப்புரையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே குற்றமற்றவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.