செய்திகள்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் கொளரவிப்பும் விருது வழங்கலும் (படங்கள்)

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த உபகரணங்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல், வலம்புரி பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு லெப் டொப், 11 புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.யோகேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேதசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சின்னத்துரை சண்முகராஜ், பரராஜசிங்கம் பாலசிங்கம், இளையதம்பி பாக்கியராசா, கந்தசாமி அரசரட்னம், கருப்பையாப்பிள்ளை லோரண்ஸ் குஞ்சா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

13

14

12

1

11

10

2

3

4

7

5

8

6