செய்திகள்

தமிழ், சிங்களத்தில் 20ம் திருத்தச் சட்டமூல ஆவணம் இல்லை

புதிய தேர்தல் முறை அடங்கிய உத்தேச 20ம் திருத்தச் சட்டமூல ஆவணம் அரச பதிப்பகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நேற்று இரவு குறித்த சட்டமூல ஆவணம் பதிப்புக்கு கிடைத்ததாக அரச பதிப்பக பொறுப்பாளர் காமினி பொன்சேகா தெரிவித்தார்.

ஆங்கில மொழியில் மாத்திரமே ஆவணம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சிங்களம், தமிழ் மொழிகளில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

அதனால் சட்டமூல ஆவணத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.