செய்திகள்

தமிழ் சிங்கள் புத்தாண்டு நிகழ்வுகளின்போது கலாச்சாரத்தை சீரழிக்கும் மதுபானவகைகள் வினியோகம்

தமிழ் சிங்கள் புத்தாண்டு விளையாட்டு போட்டிகளின்போது வெற்றிபெற்ற கழகங்களுக்கு பரிசுகளாக மேடையில் வைத்து மதுபான போத்தல்கள் வழங்கிய சம்பவம் தொடர்பாக தலைமன்னர்பியர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் பியர் பகுதியில் வை.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றுள்ளது.
இதன்போது மூவின மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். அதன்போது போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய கழக உறுப்பினர்களுக்கு பரிசுகளாக மதுபான வகைகள் மேடையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
மூவின மக்களும் கலந்துகொண்டதால்இ இந்நிகழ்வில் இதணைகண்டு மத ரீதியில்  பலர் முகம்சுழித்துள்ளனர் என தெரிவிக்கும் மக்கள்இ இவ்வாறு புத்தாண்டு கொண்டாட்டங்களில் மதுபான வகைகளை பரிசுகளாக வழங்கியமை சமூக சீர்கேடுகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளதாக சுட்டிகாட்டியுள்ள மக்கள்.
இவ்வாறான சமூக சீர்கேடான விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றனர்.
n10