செய்திகள்

தமிழ் சினிமாவில் மீண்டும் அஞ்சலி

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அங்காடித் தெரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஞ்சலி குடும்ப தகராறு மற்றும் சில சர்ச்சைகளால் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார் என திரை உலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி போன்ற படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுவரை இளம் ஹீரோக்களுடன் நடித்த அவர் இப்போது வயதான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சம்மதித்து உள்ளது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேறு சில இளம் கதாநாயகிகள் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. அஞ்சலி சம்மதம் தெரிவித்தார்.
வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் இளம் ஹீரோக்கள் அஞ்சலியை ஒதுக்கி விடுவார்கள் என பேச்சு நிலவுகிறது. இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, வயதான ஹீரோக்களுடன் நடிப்பது தவறல்ல. நான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று தெரிவித்தார் .