செய்திகள்

தமிழ் சினிமா இயக்குனர் ஐயப்பன் காலமானார்

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அய்யப்பன் (47) மாரடைப்பால் காலமானார். பேத்தி சொல்லைத் தட்டாதே, பொம்மாயி உள்பட பல படங்களை தயாரித்துள்ள இவர் 50க்கும் அதிகமான படங்களின் விநியோகம் செய்துள்ளார்.

பல வருடங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அய்யப்பன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த அய்யப்பனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.