செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஒரே இலங்கையர் என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதாம் : அமைச்சர் ராஜித கூறுகின்றார்

தமிழ் மக்கள் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அனைவரும் இலங்கையர் என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ள  அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை சுதந்திரத்தின நிகழ்வில் கலந்துக்கொண்டதினூடாக இது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்  அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
மதவாத பிரச்சினை எல்லா பிரதேசங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது. மதவாதம் ஒரேயடியாக இல்லாமல் போகாது. அதற்கு இனிவரும் காலத்தில் நாம் பல ஏற்பாடுகளை செய்யவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் நாட்டில் மதவாதம் தற்போது குறைவடைந்துள்ளது.  இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சத்தம் அடங்கிப்போயுள்ளது. முன்னர் ஆட்சியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தொடர்பான செய்திகள்இ நாளாந்தம் பத்திரிகைகளில் வெளிவந்தவண்ணமிருந்தன. ஆனால் இன்று அது தொடர்பில் எந்த பத்திரிகைகளிலும் செய்திகளை காணமுடியாது. இதற்கு காரணம்இ இன்று தமிழ் மக்கள் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டுஇ ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
குறிப்பாக இ கடந்த 3 தசாப்தத்திற்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை சுதந்திர தினத்தை எம்முடன் இணைந்து கொண்டாடினர். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும்இ தேசிய கொடி ஏற்றப்பட்டபோதும் எம்முடன் எழுந்துநின்று கௌரவம் அளித்தனர். இந்த நிலை கடந்த ஆட்சியில் ஏற்படவில்லை. காரணம்இ அவர்கள் இவற்றை மதிக்கும் அளவிற்கு நாடு இருக்கவில்லை.  ஆனால் இன்று எமது நாட்டில் ஒரே தேசிய கீதம்இ ஒரே தேசிய கொடிஇ ஒரே சுதந்திர தினம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுஇ நாம் அனைவரும் இலங்கையர்கள் எனும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்கள்.
புதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சுமார் 20 வருட காலமாக நாடாளுமன்றம் செல்லும் நான்இ இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட எந்வொரு சட்டமூலத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்ததை காணவில்லை.  எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் இணைந்திருப்பதால் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்காது என்று நம்புகின்றோம். என தெரிவித்துள்ளார்.