செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.(15)