செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, குருமன்காடு பகுதியில் குறித்த அலுவலகத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், கட்சியின் வட, கிழக்கு அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், வர்த்தக சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.