செய்திகள்

தமிழ் நாட்டில் மேற்றோரையில் சேவை தொடங்கப்பட்டது: பெண் ஒருவர் ஓட்டி சாதனை புரிந்தார்

ரூ.14 ஆயிரத்து 600 கோடிசெலவில் சென்னையில் இந்த இருவழித்தட மெட்ரோ ரெயில் சேவை பணிகள் தொடங்கப்பட்டுல்ளன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2-வது வழித்தடமான சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சுரங்கப்பாதையில் 16 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரெயில் நிலையங்கள் என 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ தொழில்நுட்பம் மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்தார்.