செய்திகள்

தமிழ் மக்களின் உரிமைகளை இலங்கை அரசு திட்டமிட்டு நசுக்குகிறது: சுயாதீன ஆய்வு அறிக்கை

இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை திட்டமிட்டு நசுக்குவது சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே .இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160.000றகும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது,

குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் யுத்தத்திற்கு பின்னர் தமிழர் எதிர்கொள்ளும் விவகாரங்களை கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி சிறிசேனவிடம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Long_Shadow_War_cover (1)

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் அங்கு மறைமுக யுத்தமொன்று தொடர்வதும்,ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் கிறிஸ்தவர்களும் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்வதும்,இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளதும்,பெரும்பான்மை சிங்களவர்களால் தீவிர பாகுபாட்டை எதிர்கொள்வதும் புதிய அறிக்கையொன்றின் முலம் தெரியவந்துள்ளது.

இரத்தக்களறியுடனான இராணுவநடவடிக்கையை தொடர்ந்து விடுதலைப்புலிகள் சரணடைந்த பின்னர் மோதல் மிகுந்த வன்முறைகளுடன் முடிவிற்கு வந்திருந்தது.மேலும் அது பாரிய அழிவினை ஏற்படுத்தியிருந்தது,பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன்,விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்தனர்.

இலங்கை படையினரும் விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை,நிலங்கள் கைப்பற்றப்பட்டமை போன்ற நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டமை, போன்ற விடயங்கள் குறித்து யுத்த குற்றவிசாரணையை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் தடையேற்படுத்தி வந்தது.

இதன் காரணமாக 2014 டிசம்பரில் இலங்கை நிலவரம் குறித்த விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைவிவகாரங்களிலும், காணி தொடர்பான விடயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவரும், சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்டவருமான அனுராத மிட்டேல்,மற்றும் ஓக்லான்ட் நிறுவகத்தின் நிiவேற்று பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இது இடம்பெற்றது . இதற்காக நூற்றிற்கும் மேற்பட்டவர்களிடம் பேட்டி காணப்பட்டது மேலும் கள ஆய்வுகளும் இடம்பெற்றன. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் முதல்தடவையாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிந்திருந்து, ஆனால் அவர்களின் ஓத்துழைப்புடன் இது இடம்பெறவில்லை.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு சில வாரங்களுக்கு முன்னர் விஜயம் மேற்கொண்டிருந்தன் பின்னர் இந்த அறிக்கை வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் நீண்ட நிழல்: யுத்தத்திற்கு பிந்திய இலங்கையில் நீதிக்கான போராட்டம் என்ற இந்த அறிக்கை மூலமாக
1-இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160.000ற்கும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது.
2-இராணுவம் பாரிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.ஆடம்பர உல்லாச விடுதிகளை நடத்துகின்றது,தமிழ்மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது,அதேவேவளை ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவத்தின் இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கான வேறு வழிகளற்ற சாட்சியங்களாவுள்ளனர்.
3-தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவெற்றிகளை குறிக்கும் நினைவுத்தூபிகளை அமைப்பதன் மூலமாகவும்,பௌத்த ஆலயங்களை அமைப்பதன் மூலமாகவும் அரசாங்கம் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை திட்டமிட்ட முறையில் ஒடுக்க, அழிக்க முயல்கின்றது.இவை தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களின் ஆதிக்கதிதை பறைசாற்றுகின்றன, இப்பகுதியில் சிறியளவிலான சிங்களவர்களே வாழ்வது குறிப்பிடத்தக்கது.
4- அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ள போதிலும் யுத்தத்தின்போது காணமற்போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையே காணப்படுகின்றது.2012 ம் ஆண்டு வெளியான ஐக்கியநாடுகள் அறிக்கை 70000 பேர் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை வேறு அறிக்கைகள் இதனைவிட இரண்டு மடங்கு அதிகமானவர்கள் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கின்றன.

Missing_cover (1)

ஜனவரி தேர்தலிற்கு பின்னர் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் குறித்து பல கருத்துக்கள் வெளியாகியுள்ள அதேவேளை குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் மேலே குறிப்பிடப்பட்ட விவகாரங்களை கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி சிறிசேனவிடம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிதருணங்களில் மிகமோசமான மனித உரிமை மீறல்களில்ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இராணுவதலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டமை,உள்நாட்டு பொறிமுறைமுலமாக யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை மறுதலிப்பதாக அமைந்துள்ளது என மிட்டல் தெரிவித்தார்.

இலங்கைக்குஇது முக்கியமான தருணம்,அரசாங்கம் தமிழர் பாரம்பரிய பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதை நிறுத்த தீர்மானிக்காத வரை,தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை பொறுப்புணர்வும்,பொறுப்புக்கூறுதலும் நிறைந்த கலாச்சாரமாக மாற்றியமைக்காத வரை,தமிழர்களும், ஏனைய சிறுபான்மை சமூகத்தினரும் நீதியான விதத்தில் நடத்தப்படுவார்கள் என்ற சிறிய நம்பிக்கை கூட ஏற்படாது.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு அரசியல் மற்றும் காணி உரிமைகளை வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாக அமையவேண்டும் அரசியல் தடுமாற்ற நிலையா விளங்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.