செய்திகள்

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதே எனது முதல் பணி: உமா குமரன்

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தனது சர்வதேச அரசியலில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கவிருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் எதிர்வரும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி சார்பில் ஹரோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இலங்கைத் தமிழரான உமா குமரன் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமாரின் கொன்வர்சேசன் (The Conversation) நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய  துடன் அதற்காக பாடுபடப் போவதாகவும் கூறினார்.

ஆங்கிலத்தில் அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=rfNU7ZTruRs” width=”500″ height=”300″]