செய்திகள்

தமிழ் மக்களின் முடிவை பாராட்டும் வடக்கு முதல்வர்

தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிறந்த ஒரு முடிவை எடுத்திருப்பதாகவும் இவரது தெரிவு கடந்த 60 வருடகால இனப்பிரச்சினைக்கு தீர்வினை கொண்டுவருவதற்கான ஒரு அடித்தளத்தினை இடும் என்று நம்புவதாகவும் வட மாகாண முதல்வர் சி.வி . விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

இன்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள மைத்திரிபால சிறிசேன பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் என்றும் அவரது தலைமைத்துவத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படைவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் மற்றும் பல தசாப்தங்களாக முறையான வாழ்க்கை தரம் இன்றி அல்லலுறும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் பொறுப்பு சிறிசேனவுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.