செய்திகள்

தமிழ் மக்கள் எங்களுடனேயே இருக்கின்றனர் என்பதனை தேர்தலில் நிரூபித்து காட்டுவோம் : சுமந்திரன்

வடக்கில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட முழு வாக்குகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் என்பதனை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிரூப்பித்து காட்ட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வட்டுக்கோட்டையில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியென்பது தேர்தல் நேரத்தில் மாத்திரமன்றி எல்லா நேரத்திலும் மக்களுடன் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் தேர்தல் என்பது அரசியல் கட்சிக்கு முக்கியமானது. அதன்போது மக்களின் ஆதரவு குறித்த கட்சிக்கு இருக்க வேண்டும். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற கட்சியாகும்  வேறு பெயர்கள் சின்னங்கள் இருந்திருந்தாலும் கட்சியின் உள்ளடக்கம் ஒன்றே இதற்கே மக்கள் ஆமோதிப்பை வழங்குகின்றனர்.
நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஆட்சி மாற்றத்திற்காக மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். இதன்படி தமிழ் மக்களும் அவரை வெற்றிப்பெற செய்தனர். இங்கிருந்து அவருக்கு வழங்கப்பட்ட வாக்குகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினுடையது. இதனை இம்முறை பொதுத் தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும். எங்களுடனேயே மக்கள் இருக்கின்றனர் என்பதனை நிரூபித்துக் காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம். என அவர் தெரிவித்துள்ளார்.