செய்திகள்

தமிழ் மக்கள் பேர­வையின் தீர்­வுத்­திட்ட முன்­வ­ரைபு: கொழும்பு தமிழ் மக்­க­ளு­ட­ன் சந்­திப்பு

தமிழ் மக்கள் பேர­வையின் நிபுணர் குழுவால் தயா­ரிக்­கப்­பட்ட அர­சியல் தீர்­வுத்­திட்ட முன்­வ­ரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்­களின் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென தமிழ் மக்கள் பேரவை கோரி­யுள்­ளது.

இது குறித்து பேர­வை­வி­டுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதாவது,

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்­திப்­புகள் பல மட்­டங்­களில் நடை­பெற்று மக்கள் கருத்­துக்கள் பதி­யப்­பட்டு வரு­கின்­றதும். இதில் மக்கள் மிகவும் உற்­சா­கத்­துடன் பங்­கு­பற்றி வரும் இவ்­வே­ளையில் ஈழத்­தமிழ் மக்­களின் உரிமை விட­யத்தில் கொழும்பு வாழ் எம்­மக்­களின் வகி­பங்கு மிகவும் அவ­சி­ய­மா­னது.

எனவே மக்கள் இயக்­க­மா­கிய தமிழ் மக்கள் பேரவை தயா­ரித்­துள்ள தீர்­வுத்­திட்ட முன்­வ­ரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்­களின் கருத்­த­றியும் மக்கள் சந்­திப்பு கொழும்பு வெள்­ள­வத்­தையில் உள்ள தமிழ்ச்­சங்க மண்­ட­பத்தில் நாளை சனிக்­கி­ழமை மாலை 4.30 மணிக்கு நடை­பெறும்.

இக்­க­ருத்­த­றியும் நிகழ்வில் தமிழ் மக்கள் அனை­வ­ரையும் வருகை தந்து தமது கருத்­துக்­களை பகி­ரும்­படி கேட்டுக் கொள்­கின்றோம்.

இதே­வேளை மிக விரைவில் தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழிவு முழு­மை­யாகத் தயா­ரிக்­கின்ற பணி ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதால் எதிர்­வரும் 31 மார்ச் 2016 ஆம் திக­திக்கு முன்­ன­தாக தமிழ் மக்கள் தங்­களின் கருத்­துக்­க­ளையும் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் political sub@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +9475 6993211 என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பி வைக்கும்படியும் கோருகின்றோம்.
R-06