செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக தொடர்ந்தும் விக்னேஸ்வரன் செயற்படுவார்: அவர் விலகிவிட்டதாக திரிபுபடுத்தப்பட்ட செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியேறிவிட்டார் என்ற கருத்துப்பட யாழ்ப்பாணத்தின் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று தெரியவருகிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியை வகிப்பார் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் பேரவையை விட்டு விலகும் நோக்கம் அவருக்கு இல்லை என்றும் யாழ்ப்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டதில் தான் பேரவையின் இணைத்தலைவராக இருப்பதால் செயற்குழுவில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்த கருத்தை அடிப்படையாக வைத்து அவர் பேரவையின் செயற்குழுவில் இருந்து விலகி விட்டதாகக திரிபுபடுத்தப்பட்ட செய்தியை குறித்த பத்திரிகை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவவருகிறது.