செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை அரசியலமைப்பு சீர்திருத்த குழுவிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்பு யோசனை அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் வைத்து கைளிக்கப்பட்டது.

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள மக்கள் கருத்தறியும் குழு அலுவலகத்தில் வைத்து தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் விவகார உப குழுவின் சார்பில் அதன் உறுப்பினர்களான நடராஜா காண்டீபன், திருச்சிற்றம்பலம் பரந்தாமன் ஆகியோர் இந்த யோசனைகள் அடங்கிய ஆவணத்தை கையளித்தனர்.

இதன்போது, மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தீர்வு யோசனை கையளிக்கப்பட்ட பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரம் அது தொடர்பில் பேச்சுக்களும் இடம்பெற்றது.

08
R-06