செய்திகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அக் கூட்டணியில் 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். மடத்துக்குளத்தில் முன்னாள் எம்எல்ஏ மகேஸ்வரியும், ராயபுரத்தில் பிஜூ சாக்கோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் முனவர் பாட்சா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் டி.வி. சிவானந்தத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 26 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கிள்ளியூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ஜான்ஜேக்கப்புக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

N5