செய்திகள்

தமிழ் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி

மருத்துவர் சி.யமுனாநந்தா

தமிழ் மொழி ஆரம்பத்தில் உருவ எழுத்துக்களையும் பின் கோல் எழுத்துக்களையும் அதன் பின்பு வட்ட எழுத்துக்களையும் உடையதாக மாறுதல் அடைந்தது. இறுதியில் தமிழ் எழுத்துக்களின் வடிவம் சதுர எழுத்துக்களாக மாற்றம் அடைந்தன.

தமிழில் உருவ எழுத்துக்களால் செதுக்கப்பட்ட பல வரிகள் உள்ள கட்டடங்கள் சிந்து வெளிப் பிரதேசத்தில் உள்ள அரப்பா மொகஞ்சதாரோ இடங்களில் அகழ்வு ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தற்காலத்துக்கும் (Neolithic age) செப்புக் காலத்திற்கும்(Copper) இடைப்பட்ட நாகரிகத்தை உடையவை என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் கீழடியில் வெளிக் கொணரப்பட்ட தொல்லியல் ஆதாரங்களும் தமிழின் தொன்மையை சான்றுடன் பகிர்கின்றது. இக் காலங்கள் யாவும் கி.மு 5000 இற்கு அப்பாலானவை.

தமிழ் மொழியிலிருந்தே ஏனைய மொழிகள் உருவாகின. உருவ எழுத்துக் காலத்திலே தான் தமிழில் இருந்து சீனம், கடாரம், சுமேரியம், கிரேக்கம், பினீசியம்,எகுப்தியம் முதலிய மொழிகள் உருவாகின. கோல் எழுத்துக் காலத்தில் தழிழில் இருந்து மராட்டியம், வங்கம், கோசலம், பலுசிசியம், ஆரியம், பாளி, பிராகிருதம் முதலிய மொழிகள் உருவாகின.

வட்ட எழுத்துக் காலத்தில் தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம். முதலிய மொழிகள் உருவாகின. தமிழ் தற்போது சதுர எழுத்துக் காலத்தின் தொடர்ச்சியாக உள்ளது.

சிந்துவெளியில் தமிழர் நாகரிகம் தழைத்து இருந்தது. அது மணல்மாரியினால் அழிவுக்கு உட்பட்டது. பின்னர் ஆரியர்களால் காவு கொள்ளப்பட்டது. நீர் சிந்திய வெளியே சிந்து நதி, சிந்து வெளியாகிறது. கோல் எழுத்துக் காலத்தில் தமிழில் 16 உயிர் எழுத்துக்களும் 35 மெய்யெழுத்துக்களும் இருந்தன. வட்ட எழுத்துக் காலத்திலும் தமிழில் 16 உயிர் எழுத்துக்களும் 35 மெய்யெழுத்துக்களும் இருந்தன. ஆரியர் வர்க்கத்தில் கோல் எழுத்துக்களால் வழங்கிய தமிழ் வட தமிழ் வட மொழி என்றும் தக்கணத்தில் வட்ட எழுத்துக்களால் வழங்கிய மொழிகளுக்கு தென் தமிழ் தென் மொழி என்றும் கூறலாயினர்.

பிற்காலத்தில் தமிழுக்கு சதுர எழுத்துக்கள் உருவாகின. இதில் 12 உயிர் எழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் அமைந்து உள்ளன.திருமூலர் வட்ட எழுத்துக் காலத்தில் தமிழைப் போற்றினர். திருமூலர் காலத்தில் தமிழ் மொழியில் 16 உயிர் எழுத்துக்களும் 35 மெய்யெழுத்துக்களும் இருந்தன. தமது பாடல்களில் கூறியுள்ளார்.

‘ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்து
ஆதி எழுத்தவை ஐம்பதோடொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலை இரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே'(942)

தமிழ் சதுர எழுத்துக் காலத்திலே துவராபுரியின்றும் வந்த உலோபா முத்திரை அகத்தியர் பேரகத்தியம், சிற்றகத்தியம் என இரண்டு இலக்கண நூல்களை வகுத்தார். பழந் தமிழில் இருந்து வேறு பிரிந்து செந்தமிழ் எனத் தமிழ் மொழிக்கு பெயரிட்டார். தமிழ் மொழிக்கு சீர்திருத்திய முறையில் ஆய்த எழுத்தையும் சேர்த்து 31 எழுத்துக்கள் வழங்கலாயின.

வட நாட்டில் வழங்கிய தமிழ் மொழிக் கிளையான ஆரியம், பிராகிருதம், முதலியவைகளைச சீர்திருத்தி சமஸ்கிருதம் என்ற மொழியை வியாசர் ஒருங்கமைத்தார். இதனால் சமஸ்கிருதம் வட தமிழ் என்ற பெயர் வழங்கலாயின.

தமிழ் வட்ட எழுத்துக் காலத்திலேயே இராவணன் தனது படைவீரர்களுக்கு சங்கேத மொழியாக தெலுங்கு மொழியினை உருவாக்கினர். இதற்காக தமிழ் வட்ட எழுத்துக்களை சிறிது மாற்றி தெலுங்கு மொழிக்காக நெடுங்கணக்கை ஏற்படுத்தினர். தெலுங்கிலும் 16 உயிர் எழுத்துக்களும் 51 மெய்யெழுத்துக்களும் உண்டு.

தமிழ் மொழி இராமாயண காலத்தில் அயோத்தியிலும் கோசலத்திலும் கிட்கிந்தையிலும் மற்றும் வட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பொது மொழியாக அமைந்து இருந்தது.

தமிழ் மொழி உலகின் ஐந்து கண்டங்களிலும் அன்று வழங்கியிருந்தமையினை திருமூலர் பாடலில் காணலாம்.

‘தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ் வது போல் உலகம் திரிவார்
அவிழ மனமும் எம் மாதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவமாமே’

இமயம் முதல் குமரி வரை அங்கம் முதல் காந்தாரம் வரை அன்று வழங்கிய 18 மொழிகளும் தமிழினின்றுமே உருவாகின. இதனை உணர்த்தும் பாடல்
‘சிங்களம்,சோனகம்,சீனம்,சாவகம்
கொங்கணம், குடகம், கொல்லம், துளுவம்
வங்கம்,கடாரம், மகதம், கோசலம்
கங்கம், காஸ்மீரம்,கலிங்கம்,நேபாளம்
அங்கதம்,காந்தாரம் ஆகிய மொழிகள்
தங்கி வளரும் தமிழ் நாடென்ப’

தமிழ் மொழியில் இருந்து உருவாகிய மொழிக் குழுமங்களாலேயே தமிழ் இனம் அழிக்கப்பட்டது. இந்தியாவில் இன்று ஹிந்தி மொழியும், தெலுங்கு, கர்நாடகா மொழிகளும் தமிழுக்கு விரோதமாக உள்ளது. அவ்வாறே இலங்கையில் சிங்கள மொழி இனக் குழுமம் தமிழர்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்றது.

இந்நிலையில் புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் கூறியவை
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா’ (புறம் 192)

நோக்கத் தக்கது. அதாவது தமிழனுக்கு முழு உலகமும் சொந்தம், வாழ்விடம். தமிழனுக்கு நன்மை தீமை பிறரிடமிருந்து வாராது. எமது இனத்திலிருந்தே வரும்.இது இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் எனவே தமிழர்கள் குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழினத்தின் வரலாற்றுத் தொல்லியல் உண்மைகளை ஐக்கிய நாடுகள் கலாசார ஒன்றியத்திவ் ஆவணப்படுத்த ஒற்றுமையாக உழைத்தல் அவசியம்.