செய்திகள்

தமீம் இக்பால் இம்ருல் கெய்ஸ் சதத்தினால் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைய வாய்ப்பு

பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 28-ந்தேதி குல்னாவில்ஆரம்பமானது.. நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் 332ஓட்டங்களை எடுத்தது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் ஹபீசின் இரட்டை சதத்தால் 628 ஓட்டங்களை குவித்தது. இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 296 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

296 ஓட்டங்கள்பின்தங்கிய நிலையில் இன்னிங்சை தொடங்கியது பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தமீம் இக்பால் இம்ருல் கெய்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் இவர்கள் விக்கெட்டை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் எடுக்க திணறினார்கள். இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். அத்துடன் இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்காள தேசம் 4-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 273 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தானை விட இன்னும் 23 ரன்கள் மட்டுமே பின் தங்கிய நிலையில் உள்ளது. சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் தமீம் (138) கெய்ஸ் (132) களத்தில் இருப்பதாலும் நாளை ஒரு நாள் மட்டுமே மீதமிருப்பதாலும் இந்த டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிய அதிக வாய்ப்புள்ளது.