செய்திகள்

தம்மை விமர்சிக்காமலிருக்குமாறு மஹிந்த கோரியதாக நவநீதம்பிள்ளை தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராகக் கடமையாற்றிய 6 வருடங்களில் தாம் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கியதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில், அப்பொழுதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தாம் தமது நாட்டின் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தம்மை விமர்சிக்காமலிருக்குமாறு கோரியதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோவில் நிகழ்த்திய உரையின்போதே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார்.

n10