செய்திகள்

தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ரஜினி! (படங்கள்)

நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஆனைக்கட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆசிரமத்துக்கும், ரிஷிகேஷில் உள்ள அவரது மற்றொரு ஆசிரமத்துக்கும் செல்வது நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கம்.

அப்படி அவர் நேற்று கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆனைக்கட்டி ஆசிரமத்துக்கு திடீர் விசிட் அடித்திருந்தார். அவர் சுவாமியுடன் இருக்கும் புகைப்படத்தை பிரத்யேகமாக நமக்கு அனுப்பியிருந்தார், சுவாமிஜியின் அணுக்கத் தொண்டரான ராமன்ஜி.

அந்த படத்தில் பாடகி அனுராதா ஶ்ரீராமும் உடன் இருந்தார். அனுராதா ஶ்ரீராமைத் தொடர்புகொண்டு, சுவாமிஜியுடனான சந்திப்பு பற்றிக் கேட்டோம்.

“நான் சுவாமிஜியின் பக்தை. கடந்த இருபது வருடங்களாக அவரின் ஆசிரமத்துக்குப் போய் வருவது என் வழக்கம். அதன்படி நேற்று சுவாமிஜியைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது, யதேச்சையாக ரஜினிகாந்த் அவர்களும் அங்கே வந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது!” என்றார் அனுராதா ஶ்ரீராம்.

சில்லென்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் பச்சைப் பசேல் அடிவார கிராமம் ஆனைக்கட்டி. அங்கே மலையின் அடிவாரத்திலேயே அமைந்திருக்கும் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தால்… காவி உடையும், ஞானஒளி வீசும் காந்தப் பார்வையுமாக சுவாமி தயானந்த சரஸ்வதி. அவரை தரிசித்த உடனே மனதில் உற்சாகப் பிரவாகம் ஏற்படும் அதிசயம். அந்த ஆசிரமத்துக்கு சுவாமி தயானந்தர் வைத்திருக்கும் பெயர் ‘ஆர்ஷ வித்யா குருகுலம்’ என்பது.

அது ஒரு கல்விச்சாலையே! வெளிநாட்டவர்–உள்நாட்டவர் எனப் பலரும் அங்கே தங்கி வேதாந்தம் பயில் கிறார்கள். வேதங்கள், உபநிஷதங்கள் நிறைந்த சுவாமி தயானந்தரின் உரையைக் கேட்பது நாடி நரம்பு களைத் தடவி, குழப்பமற்ற அமைதியையும் காரியமாற்றும் எழுச்சியையும் தரக்கூடிய ஓர் அற்புத அனுபவம்.

சாமான்யர்கள் முதல் ரஜினிகாந்த் வரை பல தரப்பினரும் இவரை நாடி வருவதில் அதிசயம் ஒன்றும் இல்லை.

rajini kovai visit 550 1

rajini kovai visit 550 2

rajini kovai visit 550 3

rajini kovai visit 550 4