செய்திகள்

தற்கொலை செய்த நடிகையின் காதலன் மருத்துவமனையில்

தற்கொலை செய்து கொண்ட டி.வி. நடிகை பிரதியுஷாவின் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா (வயது 24). இவர் நடித்த ஒரு இந்தி தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘மண்வாசனை’ என்ற பெயரில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிரதியுஷா நேற்று முன்தினம் மாலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து மும்பை பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் காதலனிடம் பொலிசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ராகுல் ராஜுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், அவரிடன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து ராகுல் ராஜு வக்கீல் ‘ராகுல் கடந்த சில நாட்களாக மார்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.’ என்று கூறியுள்ளார்.

N5