செய்திகள்

தற்போதுள்ள சமாதான சூழ்நிலை குறித்து இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு ஐ.நா.பிரதிநிதிகள் எடுத்துக் கூறுவர்

இந்தியாவில் அகதி முகாம்களிள் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி தங்களுடைய சொந்தக் கிராமங்களில் வாழ்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலை அவர்களிடம் எடுத்துச்சொல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பிரதிநிதிகள், அமைச்சர் னு.ஆ.சுவாமிநாதனை நேற்றுச் சந்தித்த போது தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மீள்குடியேற்றம் செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது அதற்கான உதவிகளை பெற்றுத்தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் அகதி மக்கள் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என மீள்குடியேற்றம் புணர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் னு.ஆ.சுவாமிநாதன் இச்சந்திப்பின் போது அவர்களிடம் தெரிவித்துள்ளார்.