செய்திகள்

தலதாமாளிகையில் இன்று மைத்திரி, ரணில் வழிபாடு; பி.ப.2 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

இலங்கையின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் பீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அதன் பின்னர் பிற்பகல்  2.00 மணிக்கு தலதாமாளிகை  எண்கோணமண்டபத்தில் அமைந்துள்ள “பத்திரிப்பு’ வில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.. இதனை முன்னிட்டு கண்டி நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.