செய்திகள்

தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மேற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் இயக்க தலைவராக செயல்படும், ஹஜ்ஜி வசீர், காபூல் நகரில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அங்குள்ள உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வசீர் கொல்லப்பட்டதாக காபூல் மாகாண காவல்தலைவர் அப்துல் ரோசி உறுதிப்படுத்தியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஏறத்தாழ 500 தீவிரவாதிகள் கொண்ட கும்பலுக்கு தலைவனாக விளங்கும் வசீர் கொல்லப்பட்டது, தலிபான் இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.