செய்திகள்

தலிபான் கடும் எச்சரிக்கை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள அரச கட்டிடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தப்போவதாக தலிபாள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோதல்களிலிருந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிப்பிழைக்கவேண்டுமென்றால் அவர்கள் ஆப்கானிலிருந்து விலக வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருடத்தின் இக்காலப்பகுதியில் தலிபான் அமைப்பு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்துவது வழமை.
இதேவேளை ஆப்கான் இராணுவ அதிகாரிகள் தலிபானின் எச்சரிக்கையை நிராகரித்துள்ளதுடன், தங்களது படையினர் எதனையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.