செய்திகள்

தலைநகரில் சவுதி கூட்டுப்படை உக்கிர தாக்குதல்: 45 பேர் சாவு

யேமனில் ஹவுத்தி போராளிகள் மற்றும் அதன் கூட்டணி படைகளை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை இன்று பல்வேறு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியது. குறிப்பாக தலைநகர் சனாவில் போராளிகள் வசம் இருந்த ஆயுதப்படை தலைமையகத்தை மீட்கும் முயற்சியாக இன்று அதிகாலை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 5 வீடுகள் உள்ளிட்ட பல குடியிருப்பு கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

அடுத்தடுத்து 4 முறை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 20 பேர் அரசுத் தரப்பில் படைவீரர்கள் அதிகாரிகள் என 25 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

44 பேர் இறந்ததாகவும் பெண்கள் குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள சபா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.