தலைநகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் தலை நகர் கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளதாகவும் விசேட போக்குவரத்து திட்டங்களை அமுல் செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
இந் நிலையில் கொழும்பு நகர் பகுதியில் மட்டும் 500 பொலிஸார் மேலதிக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு விஷேட கடமைக்காக அழைக்கப்பட்டவர்கள் எனவும் சிவில் உடையில் மேலும் பலரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.