செய்திகள்

தலைமன்னாரில் பல லட்சம் பெறுமதிமிக்க கேரளா கஞ்சா மீட்பு :ஒருவர் கைது

மன்னார் – தலைமன்னார் ஊர்மனை பகுதியில் சுமார் 8 லட்சம் பெறுமதி மிக்க கேராளா கஞ்சாவினை மன்னார் விசேட போதைபொருள் தடுப்பு பிரிவினர் நேற்று திங்கள்கிழமை அதிகாலை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் விசேட போதைபொருள் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் சமன் யட்டவலவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் விசேட போதைபொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மடவல தலைமையிலான குழு  தலைமன்னார் ஊர்மணை பகுதியில்  சோதனையிட்டபோது குறித்த 8 கிலோ 290 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதிகள் நான்கிணை அப்பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக இருந்து மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் நேற்று திங்கள் கிழமை அதிகாலை 5;30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா பொதிகளையும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 n10