செய்திகள்

தலைமன்னாரில் போதைபொருள் மீட்பு

தலைமன்னார் காட்டுபகுதியில் கங்ஸ் ( hans) என அழைக்கப்படும் ஒரு வகை போதைபொருளை தலைமன்னார் கடற்படையினர் நேற்று செவ்வாய்கிழமை (26) இரவு மீட்டுள்ளனர்.
தலைமன்னார் காட்டுபகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 கிலோ கங்ஸ் என்றழைக்கப்படும் ஒருவகை போதை பொருளை  நேற்று செவ்வாய்கிழமை இரவு  தலைமன்னார் கடற்படையினர் மீட்டுள்ளதுடன் இன்று அதணை தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும் அது தொடர்பாக இது வரையில் சந்தேகத்தின்போரில் யாரும் கைது செய்யப்படவில்லை.
போதைபொருள் பவணையாளர்கள் குறித்த போதை பொருளை நாக்கின் கீழ் வைத்தால் அது போதைதரக்குடியாதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போதைபொருள் விற்பணைக்கென எடுத்துவரப்பட்டு இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போதைபொருள் தொடர்பாக விசாரணைகணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதடன் அதணை மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையிணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
n10