செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற் பரப்புக்குள்  மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  14 இந்திய மீனவர்கள் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற் பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்கள் பயன்படுத்திய 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.